தினம் ஒரு ஊர் – மசினகுடி

தினம் ஒரு ஊர் – மசினகுடி
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – கூடலூர்
பரப்பளவு – 134.09 கிமீ²
மக்கள் தொகை – 8,783
ஆண்கள் – 4,345
பெண்கள் – 4,438
குடும்பங்கள் – 2,393
தொழில் – விவசாயம், சுற்றுலா
மசினகுடி (Masinagudi) என்பது தமிழ்நாடு, நீலகிரி மாவட்டத்தில், கூடலூர் வட்டத்தின், மசினகுடி ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும். ஊட்டியிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில், தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரளம் ஆகிய மாநில எல்லைகள் சந்திக்கும் இடத்தில் மசினகுடி சிற்றூர் அமைந்துள்ளது. இதனருகில் மசினகுடி முதுமலை தேசியப் பூங்கா மற்றும் யானைகளை பராமரிக்கும் தெப்பக்காடு யானைகள் முகாம் உள்ளது. மாயார் நீர் மின் திட்டப்பணியாளர்களின் குடியிருப்புகளுக்கு மசினகுடி மையமாக உள்ளது. மசினகுடியின் தட்பவெப்பம் ஆண்டு முழுவதும், குறைந்த வெப்பமும், குறைந்த குளிரும் கொண்டது.
மசினகுடி மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.