Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – மூனனாடு

தினம் ஒரு ஊர் – மூனனாடு
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – பந்தலூர்
பரப்பளவு – 2463.41 ஹெக்டேர்
மக்கள் தொகை – 10,304
ஆண்கள் – 5,019
பெண்கள் – 5,285
குடும்பங்கள் – 2,514
தொழில் – விவசாயம்

மூனனாடு (Moonanad) என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இது பந்தலூர் வட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 26 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மூனனாடு பகுதி வரலாற்றில் முக்கியமானது. தற்போதைய கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகள் முன்பு மலபார் மாவட்டத்தின் தென்கிழக்கு வயநாடு பகுதியாக இருந்தன. இது பணியர் பழங்குடியினர் வாழ்வியல் தொடர்புடைய பகுதியாகும். காபி மற்றும் தேயிலை விவசாயம் முக்கியமாக நடைபெறுகிறது. விவசாயத்துடன் இணைந்த தொழிலாக கால்நடை வளர்ப்பும் இடம்பெறுகிறது.

மூனனாடு மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.