தினம் ஒரு ஊர் – முதுமலை

தினம் ஒரு ஊர் – முதுமலை
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – கூடலூர்
பரப்பளவு – 18857.06 ஹெக்டேர்
மக்கள் தொகை – 1,694
ஆண்கள் – 811
பெண்கள் – 883
குடும்பங்கள் – 404
தொழில் – விவசாயம், சுற்றுலா
முதுமலை (Mudumalai) தமிழ்நாடு, நீலகிரி மாவட்டத்தில், கூடலூர் வட்டத்திலுள்ள ஒரு கிராமமாகும். கூடலூரிலிருந்து 21 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, முதுமலையின் முக்கிய விவசாயப் பயிர்கள் காபி, நெல் மற்றும் இஞ்சி ஆகும். முதுமலை மற்றும் சுற்றுப்பகுதியின் முக்கிய இடங்கள்: முதுமலை, நீலகிரி உயிர்க்கோளப் பகுதி மற்றும் வனவிலங்கு பாதுகாப்புச் சூழலுடன் இணைந்த தனித்துவமான பகுதியாகவும் விளங்குகிறது. முதுமலை புலிகள் காப்பகம் மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கிடையிலான முக்கிய வனவிலங்கு இணைப்புப் பகுதியாகவும் குறிப்பிடப்படுகிறது. தெப்பக்காடு யானை முகாம் முதுமலைப் பகுதியின் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்று.
முதுமலை மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.