Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – தேனாடு

தினம் ஒரு ஊர் – தேனாடு
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – கோத்தகிரி
பரப்பளவு – 2932.63 ஹெக்டேர்
மக்கள் தொகை – 8,284
ஆண்கள் – 4,061
பெண்கள் – 4,223
குடும்பங்கள் – 2,309
தொழில் – விவசாயம், சுற்றுலா

தேனாடு (Denad) என்பது நீலகிரி மலையின் அமைதியான மற்றும் அழகான சூழலுக்கு பெயர் பெற்ற இடமான கோத்தகிரி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இது மாவட்டத் தலைமையகமான உதகமண்டலத்திலிருந்து கிழக்கே 31 கி.மீ தொலைவிலும், கோத்தகிரியிலிருந்து 6 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
தேனாடு பசுமையான புல்வெளிகள், பரந்த தேயிலைத்தோட்டங்கள், தேயிலைத் தொழிற்சாலைகள் மற்றும் குளிர்ச்சியான காலநிலை ஆகியவற்றால் ஒவ்வொரு பார்வையாளர்களையும் ஈர்க்கும்.
தேனாடு மக்களின் இரட்சிப்பிற்காகவு
ம், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.