தினம் ஒரு நாட்டின் மாநிலம் – லோகோன் ஓரியண்டல்

லோகோன் ஓரியண்டல் மாநிலத்துக்காக ஜெபிப்போம்,
லோகோன் ஓரியண்டல் (Logone Oriental) என்பது சாட் நாட்டின் 23 பிராந்தியங்களில் ஒன்றாகும், இது நாட்டின் தென்மேற்கில் அமைந்துள்ளது.
லோகோன் நதி மாநிலத்தின் மிக முக்கிய இயற்கை எழில் கொஞ்சும் நதி இதுவாகும். இந்த நதிக்கரையில் படகு சவாரி செய்வது, தூண்டில் போட்டு மீன் பிடிப்பது மற்றும் ஆப்பிரிக்கப் பறவைகளைக் காண்பது சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம். லோகோன் நதியின் துணை நதியான கோமே நதி கரையில் அமர்ந்து அமைதியான இயற்கை சூழலை ரசிக்கலாம். லோகோன் ஓரியண்டல் மாநிலத்தை ஒட்டிய பகுதிகளில் அமைந்துள்ள மந்தா தேசிய பூங்காவில் ஆப்பிரிக்காவின் தனித்துவமான விலங்கினங்களை கண்டு மகிழலாம். முக்கிய இனமொழியியல் குழுக்கள் டோபா மக்கள் (பெட்ஜோண்ட், மாங்கோ, கோர் மொழிகளைப் பேசுபவர்கள்), கரங், குவோ, என்சாகம்பே, பானா மற்றும் சாரா குழுக்கள் (கப்பா, லாகா, எங்காம்பே மொழிகளைப் பேசுபவர்கள்).
இந்த மாநில மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.