Appam, Daily Updates

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – ஃபெஸ்-மெக்னெஸ்

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – ஃபெஸ்-மெக்னெஸ்
நாடு – மொராக்கோ
கண்டம் – ஆப்பிரிக்கா
மொத்த பரப்பளவு – 38,881.5 கிமீ²
மக்கள் தொகை – 4,467,911
தலைநகரம் – ஃபெஸ்
ஆட்சி மொழி – அரபு, பெர்பர்
தொழில் – விவசாயம்

ஜெபிப்போம்,

ஃபெஸ்-மெக்னெஸ் (Fez-Meknes) என்பது மொராக்கோவின் வட-மத்திய பகுதியில், பன்னிரண்டு நிர்வாக மாகாணத்தில் ஒன்றாகும். ஃபெஸ்-மெக்னெஸ் வடக்கே ரிஃப் மலைகளுக்கும் தெற்கே மத்திய அட்லஸ் மலைகளுக்கும் இடையில் அமைந்துள்ளது.
முக்கிய ஈர்ப்புகளில் யுனெஸ்கோ தளமான மெதினாவின் சுவர்கள், மிஸ்ஸூர் பகுதியின் உயரமான மலைகள், முக்கிய ஆறுகளான செபோ, இனாவென் – ஓர்கா, கராவுயின் மசூதி, தோல் பதனிடும் இடங்கள், மெரினிட்களின் கல்லறைகள், நெஜ்ஜரின் அருங்காட்சியகம், மௌலே யாகூப் வெந்நீர் ஊற்றுகள், இஃப்ரே தேசிய பூங்கா மற்றும் டாசெக்கா தேசிய பூங்கா ஆகியவை அடங்கும். ஆலிவ் எண்ணெய் உற்பத்தியில் இந்த மாகாணம் சிறந்து விளங்குகிறது. மேலும் தீவிரமான பீச் பழச் சாகுபடிக்குச் சிறந்து விளங்குகிறது.
இந்த மாகாண மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.

// Day of week // Sunday=0, Monday=1, Tuesday=2, Wednesday=3, Thursday=4, Friday=5, Saturday=6