தினம் ஒரு நாட்டின் மாநிலம் – உங்குஜா வடக்கு

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – உங்குஜா வடக்கு
நாடு – தான்சானியா
கண்டம் – ஆப்பிரிக்கா
மொத்த பரப்பளவு – 470 கிமீ²
மக்கள் தொகை – 187,455
தலைநகரம் – எம்கோகோடோனி
அதிகாரப்பூர்வ மொழி – சுவாகிலி
தொழில் – சுற்றுலா, விவசாயம்
ஜெபிப்போம்,
உங்குஜா வடக்கு மாகாணம் (Unguja North Region) அல்லது சான்சிபார் வடக்கு மாகாணம், தான்சானியாவின் 31 பிராந்தியங்களில் ஒன்றாகும். இந்த நிர்வாக மாகாணம் முழுவதுமாக சான்சிபார் தீவில் அமைந்துள்ளது.
உங்குஜா வடக்கு மாகாணத்தில் 5-க்கும் மேற்பட்ட கடற்கரைகள் உள்ளன. இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது. தூய்மையான கடற்கரைகள், வண்ணமயமான பவளப்பாறைகள், துடிப்பான கடல்வாழ் உயிரினங்கள், கிராம்பு போன்ற நறுமணப் பயிர்த் தோட்டங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்திற்காகப் புகழ்பெற்றது. விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் ஆகியவை பிற முக்கியத் தொழில்களாகும்.
இந்த மாகாண மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.