தினம் ஒரு நாட்டின் மாநிலம் – குல்மிம்-ஓட் நூன்

ஜெபிப்போம்,
குல்மிம்-ஓட் நூன் (Guelmim-Oued Noun), என்பது மொராக்கோவின் பன்னிரண்டு நிர்வாக மாகாணங்களில் ஒன்றாகும். இம்மாகாணத்தின் தென்கிழக்கு பகுதி மேற்கு சஹாராவில் அமைந்துள்ளது. தலைநகர் குல்மிம் மற்றும் நூன் ஆறு ஆகியவை வடக்குப் பகுதியில் அமைந்துள்ளன. இவை இரண்டும் இணைந்தே இம்மாகாணத்திற்கு இப்பெயரை வழங்கியுள்ளன.
மீன்பிடித்தல் ஒரு முக்கிய பொருளாதார நடவடிக்கையாகும். சிடி இஃப்னி மற்றும் எல் ஓட்டியா ஆகிய இடங்களில் துறைமுகங்கள் உள்ளன. கடற்கரைச் சுற்றுலாத் துறை இங்கு மேம்படுத்தப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்காகப் பாயும் டிரா ஆற்றின் கீழ் பகுதி இம்மாகாணத்தை இரு பகுதிகளாகப் பிரிக்கிறது. மொராக்கோ சுவர் (Moroccan Wall) அமைப்பின் ஒரு பகுதி இம்மாகாணத்தின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளது.
இந்த மாகாண மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.