Appam, Daily Updates

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – வல்லே டு பண்டமா

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – வல்லே டு பண்டமா
கண்டம் – ஆப்பிரிக்கா
நாடு – ஐவரி கோஸ்ட் (கோட் டி ஐவரி)
மாநிலம் – வல்லே டு பண்டமா
மொத்தப் பரப்பளவு – 28,518 கிமீ²
மக்கள் தொகை – 1,964,929
தலைநகரம் – புவாக்கே
அலுவல் மொழி – பிரெஞ்சு
முதன்மைத் தொழில் – விவசாயம்

வல்லே டு பண்டமாக்காக ஜெபிப்போம்,

வல்லே டு பண்டமா (Vallée du Bandama) என்பது ஐவரி கோஸ்ட் (கோட் டி ஐவரி) நாட்டின் பதினான்கு நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாகும். இது நாட்டின் வட-மத்திய பகுதியில் அமைந்துள்ளது.

வல்லே டு பண்டமா-ன் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக விவசாயம் திகழ்கிறது. பண்டமா நதிப் படுகையின் வளமான மண் இதற்குப் பெரிதும் உதவுகிறது. ஏற்றுமதிக்கான முக்கிய பயிர்களான கொக்கோ, காபி, பருத்தி மற்றும் புகையிலை ஆகியவை இங்கு அதிகளவில் பயிரிடப்படுகின்றன. மேலும் நெல்/அரிசி, மரவள்ளிக்கிழங்கு மற்றும் யாம் கிழங்கு வகைகள் பயிரிடப்படுகின்றன. முக்கிய ஈர்ப்புகளில் என்’சி ரிவர் லாட்ஜ் எனும் இயற்கை மற்றும் வனவிலங்கு காப்பகம், பிலேஸ் டி லா பேக்ஸ் எனும் அழகான பூங்கா, ஏழு பாறைக் மலைகள் மற்றும் உயரமான சிகரத்தைக் கொண்ட இயற்கை மற்றும் வனவிலங்குகள் நிறைந்த பகுதியான மவுண்ட் நியாங்கோ ஆகியவை அடங்கும்.

வல்லே டு பண்டமா மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், அமைதிக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.