Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – மொட்டனூத்து

தினம் ஒரு ஊர் – மொட்டனூத்து
மாவட்டம் – தேனி
வட்டம் – ஆண்டிபட்டி
பரப்பளவு – 2311.76 ஹெக்டேர்
மக்கள் தொகை – 8,925
ஆண்கள் – 4,454
பெண்கள் – 4,471
குடும்பங்கள் – 2,391
முதன்மைத் தொழில் – விவசாயம்

மொட்டனூத்து கிராமத்துக்காக ஜெபிப்போம்,

மொட்டனூத்து (Mottanuthu) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஆண்டிபட்டியில் உள்ள வட்டத் தலைமையகத்திலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது. மொட்டனூத்து கிராமத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவை மிக முக்கியமான வாழ்வாதாரத் தொழில்களாக உள்ளன. இப்பகுதியில் கொட்டை முந்திரி, தக்காளி, முருங்கை மற்றும் வெங்காயம் போன்ற பயிர்கள் பெருமளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. மொட்டனூத்து மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராம விவசாயிகள் ஒட்டு ரக கொட்டை முந்திரி சாகுபடியை அதிக அளவில் தேர்வு செய்து வெற்றிகரமாகப் பயிரிட்டு வருகின்றனர். இப்பகுதியின் விவசாயப் பாசனத்திற்குப் பெருமளவில் ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் திறந்தவெளிக் கிணறுகளே முதன்மை ஆதாரமாக விளங்குகின்றன.

மொட்டனூத்து மக்களின் இரட்சிப்பிற்காகவும், அமைதிக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.