Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – புலிகுத்தி

தினம் ஒரு ஊர் – புலிகுத்தி
மாவட்டம் – தேனி
வட்டம் – உத்தமபாளையம்
பரப்பளவு – 492.68 ஹெக்டேர்
மக்கள் தொகை – 2,503
ஆண்கள் – 1,283
பெண்கள் – 1,220
குடும்பங்கள் – 707
தொழில் – விவசாயம்

புலிகுத்தி கிராமத்துக்காக ஜெபிப்போம்,

புலிகுத்தி (Pulikuthi) என்பது தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மாவட்டத் தலைமையிடமான தேனியிலிருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. புலிகுத்தி கிராமத்தில் விவசாயமே முக்கிய வாழ்வாதாரத் தொழிலாக விளங்குகிறது. இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பெரும்பாலும் முல்லைப் பெரியாற்றுப் பாசனக் கால்வாய்கள், கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் 100% பாசன வசதியைப் பெறுகின்றன. இக்கிராமத்தின் மிக முதன்மையான நீண்டகால மற்றும் குறுகியகால வாழ்வாதாரப் பயிர்களாக தென்னை மற்றும் வாழை சாகுபடி விளங்குகிறது. புலிகுத்தி பகுதியில் பச்சை மிளகாய் மிக முக்கிய வணிகப் பயிராக பெருமளவில் பயிரிடப்படுகிறது. மேலும் தக்காளி, கத்தரி போன்ற இதர காய்கறி வகைகளும், நெல் மற்றும் பயறு வகைகளும் சாகுபடி செய்யப்படுகின்றன.

புலிகுத்தி மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.