Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – சீப்பாலக்கோட்டை

தினம் ஒரு ஊர் – சீப்பாலக்கோட்டை
மாவட்டம் – தேனி
வட்டம் – உத்தமபாளையம்
பரப்பளவு – 2642.78 ஹெக்டேர்
மக்கள் தொகை – 9,426
ஆண்கள் – 4,815
பெண்கள் – 4,611
குடும்பங்கள் – 2,621
தொழில் – விவசாயம்

சீப்பாலக்கோட்டை கிராமத்துக்காக ஜெபிப்போம்,

சீப்பாலக்கோட்டை (Seepalakottai) என்பது தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தின் உத்தமபாளையம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இது வட்டத் தலைமையிடமான உத்தமபாளையத் திலிருந்து சுமார் 19 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு விவசாயம் மற்றும் கூலித்தொழில் முக்கியத் தொழிலாக உள்ளது. முல்லைப் பெரியாறு பாசனப் பகுதியின் அருகில் அமைந்துள்ளதால், இவ்வூரில் விவசாயம் மிகச் செழிப்பாக நடைபெறுகிறது. சீப்பாலக்கோட்டை பகுதியில் வாழை விவசாயம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்பகுதியில் தக்காளி, கத்தரி, மிளகாய், வெங்காயம் போன்ற தோட்டக்கலை மற்றும் காய்கறி பயிர்கள் மிக அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. நீர் வரத்தைப் பொறுத்து நெல் சாகுபடியும், கிணற்றுப் பாசனத்தை நம்பி தென்னை மற்றும் இதர தோட்டப் பயிர்களும் வளர்க்கப்படுகின்றன.
சீப்பாலக்கோட்டை மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.