தினம் ஒரு ஊர் – உப்புக்கோட்டை

உப்புக்கோட்டை கிராமத்துக்காக ஜெபிப்போம்,
உப்புக்கோட்டை (Uppukottai) என்பது தமிழ்நாடு மாநிலத்தில், தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது முல்லைப் பெரியாற்றின் கரையில் அமைந்துள்ளது. இது வட்டத் தலைமையிடமான போடிநாயக்கனூரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் விவசாயம் முக்கியத் தொழிலாகும். முல்லை ஆற்றின் நீர்வரத்தும், உப்புக்கோட்டை அணைப் பகுதியும் இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்திற்கும் பாசனத்திற்கும் முக்கிய ஆதாரங்களாக விளங்குகின்றன. உப்புக்கோட்டை பகுதியில் முதல்போகம் மற்றும் இரண்டாம் போக நெல் சாகுபடி தீவிரமாக நடைபெறுகிறது. இவற்றுடன் தக்காளி, கத்தரி போன்ற காய்கறிகள் மற்றும் ஆமணக்கு, அவரை, வேர்க்கடலை போன்ற ஊடுபயிர்களும் விளைவிக்கப்படுகின்றன. இப்பகுதியில் பட்டுப்புழு வளர்ப்பு ஒரு முக்கிய விவசாயம் சார்ந்த தொழிலாக மேற்கொள்ளப்படுகிறது.
உப்புக்கோட்டை மக்களின் இரட்சிப்பிற்காகவும், அமைதிக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.