Appam, Daily Updates

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – ஹோத் எச் சார்குயி

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – ஹோத் எச் சார்குயி
கண்டம் – ஆப்பிரிக்கா
நாடு – மௌரிடானியா
மாநிலம் – ஹோத் எச் சார்குயி
மொத்தப் பரப்பளவு – 182,700 கிமீ²
மக்கள் தொகை – 625,643
தலைநகரம் – நேமா
அலுவல் மொழி – அரபு
முதன்மைத் தொழில் – கால்நடை வளர்ப்பு

ஹோத் எச் சார்குயி மாநிலத்துக்காக ஜெபிப்போம்,

ஹோத் எச் சார்குயி (Hodh Ech Chargui) என்பது மௌரிடானியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும்.

ஹோத் எச் சார்குயி மாநிலத்திலிருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கும் அண்டை நாடுகளுக்கும் கால்நடைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இப்பகுதியில் பாரம்பரிய விவசாய முறைகள் மூலம் உணவுப் பயிர்கள் மற்றும் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. ஹோத் எச் சார்குயி மாநிலம், பாலைவன நிலப்பரப்புகள், பழங்கால வர்த்தக நகரங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்குப் பெயர் பெற்றது. சிவப்பு மற்றும் காவி நிற ஓவியங்களுடன் அலங்கரிக்கப்பட்ட பாரம்பரிய களிமண் வீடுகளும், பழமையான கையெழுத்துப் பிரதி நூலகங்கள் போன்ற தனிச்சிறப்பு வாய்ந்த யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமான வலத்தா, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் தளமான கௌம்பி சலே, ஹோத் எச் சார்ஜி செங்குத்துப் பாறைகள் இப்பகுதியின் சிறப்பம்சங்கள் ஆகும்.

ஹோத் எச் சார்குயி மாநில மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், அமைதிக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.