Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – உத்தமபாளையம்

தினம் ஒரு ஊர் – உத்தமபாளையம்
மாவட்டம் – தேனி
வட்டம் – உத்தமபாளையம்
பரப்பளவு – 9 ச.கிமீ
மக்கள் தொகை – 29053
ஆண்கள் – 14463
பெண்கள் – 14590
குடும்பங்கள் – 7,508
தொழில் – விவசாயம், சுற்றுலா

உத்தமபாளையம் கிராமத்துக்காக ஜெபிப்போம்,

உத்தமபாளையம் (Uthamapalayam) தமிழ்நாடு, தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இது தேனியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் தேனி – கம்பம் சாலையில் உள்ளது. உத்தமபாளையம் நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. உத்தமபாளையம் பேரூராட்சி, முல்லைப் பெரியாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகும். கம்பம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இப்பகுதி விவசாயச் செழிப்பு வாய்ந்த பகுதியாகும். இங்கு முல்லைபெரியாறு பாசன வசதியால் நெல், வாழை, திராட்சை, தென்னை, மலர்கள் மற்றும் கரும்பு ஆகியவை முக்கியப் பயிர்களாகச் சாகுபடி செய்யப்படுகின்றன. உத்தமபாளையம் நகரின் வழியே பாயும் முல்லைப் பெரியாறு மற்றும் அங்குள்ள தடுப்பணைப் பகுதி ஒரு சிறந்த இயற்கை மற்றும் பொழுதுபோக்கு இடமாகும்.

உத்தமபாளையம் மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.