தினம் ஒரு நாட்டின் மாநிலம் – நியாசா

நியாசா மாகாணத்துக்காக ஜெபிப்போம்,
நியாசா (Niassa) என்பது மொசாம்பிக்கின் ஒரு மாகாணம் ஆகும். மொசாம்பிக் நாட்டின் வடமேற்கில் அமைந்துள்ளது.
நியாசா மாகாணம் ஒரு அழகான மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் மாகாணமாகும். முக்கிய ஈர்ப்புகளில் மொசாம்பிக் நாட்டின் மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான நியாசா தேசிய காப்பகம், உலகின் மிக ஆழமான மற்றும் தெளிவான நீர்நிலைகளில் ஒன்றான நியாசா ஏரி, ருவுமா ஆறு மற்றும் லிச்சிங்கா பீடபூமி ஆகியவை அடங்கும். நியாசா மாகாணத்தின் பொருளாதாரம் முதன்மையாக விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. மீன்பிடித்தல், மரக்கட்டைகள் மற்றும் விறகு உற்பத்தி இங்குள்ள உள்ளூர் பொருளாதாரத்திற்கு முக்கியப் பங்களிப்பை வழங்குகின்றன. மக்காச்சோளம் இங்கு மிக அதிகமாகப் பயிரிடப்படும் பயிராகும். இது தவிர மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு, சோயாபீன்ஸ், வேர்க்கடலை மற்றும் பீன்ஸ் ஆகியவையும் பயிரிடப்படுகின்றன.
நியாசா மாகாண மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.