தினம் ஒரு நாட்டின் மாநிலம் – டாங்கியர்-டெட்வான்-அல் ஹோசிமா

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – டாங்கியர்-டெட்வான்-அல் ஹோசிமா
நாடு – மொராக்கோ
கண்டம் – ஆப்பிரிக்கா
மொத்த பரப்பளவு – 15,090 கிமீ²
மக்கள் தொகை – 4,030,222
தலைநகரம் – டாங்கியர்
ஆட்சி மொழி – அரபு, தமசைட்டு
தொழில் – விவசாயம்
ஜெபிப்போம்,
டாங்கியர்-டெட்வான்-அல் ஹோசிமா (Tangier-Tétouan-Al Hoceima), மொராக்கோவின் பன்னிரண்டு பிராந்தியங்களில் வடக்கே அமைந்துள்ளது.
டாங்கியர்-டெட்வான்-அல் ஹோசிமா மாகாணத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடித்தல் மற்றும் சுற்றுலா ஆகியவை பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பாளர்களாக உள்ளன. முக்கிய பயிர்களில் தானியங்கள், பருப்பு வகைகள், ஆலிவ் மற்றும் கரும்பு ஆகியவை அடங்கும். இதன் முக்கிய ஈர்ப்புகளில் ஜிப்ரால்டர் நீரிணை, மத்திய தரைக்கடல், ரிஃப் மலைத்தொடர், அல் ஹொசைமா தேசியப் பூங்கா, தலசெம்டேன் தேசியப் பூங்கா, லூக்கோஸ் நதி ஆகியவை அடங்கும்.
இந்த மாகாண மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.