தினம் ஒரு நாட்டின் மாநிலம் – லிம்போபோ

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – லிம்போபோ
நாடு – தென்னாப்பிரிக்கா
கண்டம் – ஆப்பிரிக்கா
மொத்த பரப்பளவு – 125,754 கிமீ²
மக்கள் தொகை – 5,404,868
தலைநகரம் – போலோக்வேன்
அதிகாரப்பூர்வ மொழி – பெடி, வெண்டா
தொழில் – விவசாயம், சுரங்கத் தொழில்
ஜெபிப்போம்,
லிம்போபோ (Limpopo), தென்னாப்பிரிக்காவின் வடகோடியில் உள்ள மாகாணம் ஆகும்.
லிம்போபோவின் முக்கிய ஈர்ப்புகளில் லிம்போபோ ஆறு, வாட்டர்பெர்க் உயிர்க்கோளத்தின் பெரும்பகுதி, க்ரூகர் தேசியப் பூங்கா ஒரு பகுதியாக உள்ள கிரேட் லிம்போபோ டிரான்ஸ்ஃபிரான்டியர் பூங்கா ஆகியவை அடங்கும். சூரியகாந்தி, பருத்தி, மக்காச்சோளம், வேர்க்கடலை, வாழைப்பழம், லிச்சி, அன்னாசிப்பழம், மாம்பழம், பப்பாளி, சிட்ரஸ், தேயிலை மற்றும் காபி ஆகியவை பயிரிடப்படுகின்றன. இங்கு தங்கம், மரகதங்கள், பிளாட்டினம், இரும்புத் தாது, குரோமியம், வைரங்கள், தாமிரம் ஆகிய கனிம வளங்கள் உள்ளன.
லிம்போபோ மாகாண மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.