தினம் ஒரு நாட்டின் மாநிலம் – மபூட்டோ

மபூட்டோ மாகாணத்துக்காக ஜெபிப்போம்,
மபூட்டோ (Maputo) என்பது மொசாம்பிக்கின் ஒரு மாகாணம் ஆகும். இந்த மாகாணம் மொசாம்பிக்கின் தென்கோடி மாகாணமாகும். இதன் கிழக்கே இந்தியப் பெருங்கடல் உள்ளது.
ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய அலுமினிய உருக்காலைகளில் ஒன்றான மொசால் மபூட்டோ மாகாணத்தில் அமைந்துள்ளது. இது நாட்டின் முக்கிய ஏற்றுமதி மற்றும் வருவாய் ஆதாரமாகும். இந்த மாகாணத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் ஆழ்கடல் துறைமுகமான மபூட்டோ துறைமுகம். முக்கிய ஈர்ப்புகளில் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற மபூட்டோ தேசிய பூங்கா, பல பவளப்பாறைகள் மற்றும் ஏரிகளைக் கொண்ட மபூட்டோ வளைகுடாப் பகுதி, மிகப்பெரிய நதியான மபூட்டோ ஆறு, இன்ஹாகா தீவு, இன்ஹாகா மலை, கோருமானா அணை, லகோவா சிங்குடே மற்றும் லகோவா பிட்டி போன்ற ஏரிகள் மற்றும் உம்பேலுசி, இன்கோமாட்டி – லிம்போபோ ஆறுகள் ஆகியவை அடங்கும்.
மபூட்டோ மாகாண மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.