தினம் ஒரு ஊர் – மசினகுடி

தினம் ஒரு ஊர் – மசினகுடி
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – உதகமண்டலம்
பரப்பளவு – 13409 ஹெக்டேர்
மக்கள் தொகை – 8,783
ஆண்கள் – 4,345
பெண்கள் – 4,438
குடும்பங்கள் – 2,393
தொழில் – விவசாயம், சுற்றுலா
மசினகுடி நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை வட்டத்தில் அமைந்துள்ளது. இது ஊட்டியிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இதனருகில் மசினகுடி முதுமலை தேசியப் பூங்கா உள்ளது. முதுமலை தேசியப் பூங்கா மற்றும் யானைகளை பராமரிக்கும் தெப்பக்காடு யானைகள் முகாம் இங்கு உள்ளது. மாயார் நீர் மின் திட்டப்பணியாளர்களின் குடியிருப்புகளுக்கு மசினகுடி மையமாக உள்ளது. 1940-இல் தொடங்கப்பட்ட இதுவே தென்னிந்தியாவின் முதல் வனக்காப்பகம் ஆகும். மேலும் இந்த தேசியப் பூங்கா யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மசினகுடி மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.