தினம் ஒரு ஊர் – நெல்லியாளம்

தினம் ஒரு ஊர் – நெல்லியாளம்
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – பந்தலூர்
பரப்பளவு – 4774.15 ஹெக்டேர்
மக்கள் தொகை – 21,836
ஆண்கள் – 10,564
பெண்கள் – 11,272
குடும்பங்கள் – 4,965
தொழில் – விவசாயம், சுற்றுலா
நெல்லியாளம் (Nelliyalam), தமிழ்நாட்டில், நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இது உகதமண்டலத்திற்கு வடமேற்கே 78 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நெல்லியாளம் பகுதியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நெல்லியாளம் ராணியின் கோட்டை அமைந்துள்ளது. இந்த கட்டிடம் தற்போது இடிந்து போயுள்ளது. இப்பகுதி தேயிலைத் தோட்டங்கள், காடுகள், மலைச்சரிவுகள், ஈரநிலங்கள் மற்றும் நீரோடைகள் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள குருசுமலை மலை உச்சிப் பகுதி சுற்றியுள்ள மலைக் காட்சிகளை ரசிக்க ஏற்ற இடமாகும்.
நெல்லியாளம் மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.