தினம் ஒரு ஊர் – டி. மீனாட்சிபுரம்

டி. மீனாட்சிபுரம் கிராமத்துக்காக ஜெபிப்போம்,
டி. மீனாட்சிபுரம் (T. Meenakshipuram) என்பது தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது வட்டத் தலைமையிடமான உத்தமபாளையத்திலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. டி. மீனாட்சிபுரம் பகுதியில் விவசாயம் மிக முக்கியமான முதன்மைத் தொழிலாக உள்ளது. இப்பகுதி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ளதால், விவசாயம் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடிக்கு உகந்த சூழலைக் கொண்டுள்ளது. இப்பகுதியில் மக்காச்சோளம், சோளம், கம்பு, பருத்தி போன்ற பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. திராட்சை, வாழை மற்றும் காய்கறி சாகுபடியும் இங்கு பரவலாக நடைபெறுகிறது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு இக்கிராமத்தின் விவசாயத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.
டி. மீனாட்சிபுரம் மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.