தினம் ஒரு ஊர் – கீழவடகரை

கீழவடகரை கிராமத்துக்காக ஜெபிப்போம்,
கீழவடகரை (Keelavadagarai) தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பெரியகுளத்தில் உள்ள வட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கீழவடகரை மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வளம் மிகுந்த விவசாய பூமியாகத் திகழ்கிறது. இந்தச் செழிப்பான மண்ணில் நெல், கரும்பு, மா மற்றும் பல்வேறு பாரம்பரிய பயிர்கள் பெருமளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. கீழவடகரை பகுதியில் இயற்கை விவசாய முறைகளைப் பின்பற்றி பாரம்பரிய நெல் ரகங்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இயற்கை முறையில் சாகுபடி செய்த பாரம்பரிய அரிசி ரகங்கள் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்குத் தேனியிலிருந்து நேரடியாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இப்பகுதியில் பாரம்பரியமாக வெற்றிலை விவசாயம் பெருமளவில் நடைபெற்று வருகிறது.
கீழவடகரை மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.