தினம் ஒரு ஊர் – இராயப்பன்பட்டி

இராயப்பன்பட்டி கிராமத்துக்காக ஜெபிப்போம்,
இராயப்பன்பட்டி (Royappanpatti) என்பது தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது உத்தமபாளையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது கம்பம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இப்பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ளதால் தேயிலை, ஏலக்காய், மிளகு போன்ற மலைப்பயிர்கள் விளைகின்றன. கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கே உரிய சிறப்பான திராட்சை சாகுபடி இங்கும் பரவலாக நடைபெறுகிறது. மேலும் தேங்காய், வாழை, நெல் ஆகிய பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. விவசாயத்துடன் இணைந்து உபரி தொழிலாகக் கோழி வளர்ப்பும் இங்கு சிறந்து விளங்குகிறது. முல்லைப் பெரியாறு ஆற்றின் பாசனக் கால்வாய்கள் மற்றும் இப்பகுதியில் அமைந்துள்ள சண்முகாநதி அணை ஆகியவை விவசாயத்திற்கான முக்கிய நீர் ஆதாரங்களாக விளங்குகின்றன.
இராயப்பன்பட்டி மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.