தினம் ஒரு நாட்டின் மாநிலம் – ஓமஹேகே

ஓமஹேகே மாநிலத்துக்காக ஜெபிப்போம்,
ஓமஹேகே (Omaheke) என்பது நமீபியாவின் பதினான்கு மாநிலங்களில் ஒன்றாகும். இது நமீபியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஓமஹேகே என்றால் மணல்வெளி என்று பொருள். இந்த மாநிலத்தின் பெரும்பகுதி மணல்வெளி என்று அழைக்கப்படுகிறது.
ஓமஹேகே மாநிலம் புகழ்பெற்ற கலஹாரி பாலையின் விளிம்பில் உள்ளதால், தனித்துவமான பாலைவன நிலப்பரப்புகளையும், வறண்ட நிலப்பகுதிக்கே உரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களையும் கொண்டுள்ளது. ஓமஹேகே மாநிலம் நமீபியாவில் ‘கால்நடை நாடு’ என்று அழைக்கப்படுகிறது. நமீபியாவின் வேட்டைத் தலைநகரமாக (Hunting Capital) ஓமஹேகே கருதப்படுகிறது. குளிர்கால மாதங்களில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து வேட்டையாடுதல் மூலம் மாநிலத்திற்கு நல்ல வருவாயை ஈட்டித் தருகின்றனர். ஹர்னஸ் வனவிலங்கு புகலிடம் இப்பகுதியில் உள்ள மிகவும் பிரபலமான ஒரு இடமாகும்.
ஓமஹேகே மாநில மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், அமைதிக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.