Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – கடமலைக்குண்டு

தினம் ஒரு ஊர் – கடமலைக்குண்டு
மாவட்டம் – தேனி
வட்டம் – ஆண்டிப்பட்டி
பரப்பளவு – 6942.85 ஹெக்டேர்
மக்கள் தொகை – 23,650
ஆண்கள் – 12,103
பெண்கள் – 11,547
குடும்பங்கள் – 6,841
முதன்மைத் தொழில் – விவசாயம்

கடமலைக்குண்டு கிராமத்துக்காக ஜெபிப்போம்,

கடமலைக்குண்டு (Kadamalaigundu) என்பது தமிழ்நாடு, தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இது மயிலாடும்பாறைக்கு அருகில் உள்ளது. இதன் அருகே வைகை ஆறும், சின்னச்சுருளி என்ற மேகமலை அருவியும், அதன் மறுபக்கம் சுருளி அருவியும் உள்ளது. இப்பகுதியில் தென்னை, தட்டாங்காய் போன்ற பயிர்கள் முக்கியச் சாகுபடியாக உள்ளன. இப்பகுதியிலுள்ள வரலாற்று எச்சங்களில் மயிலாடும்பாறைக்கு அருகில் உள்ள வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உடைந்த நிலையில் உள்ள தடுப்பணை, அதன் மேற்கே வைகையாற்றின் மேற்குக் கரையில் கல்லால் கட்டப்பட்ட கல்மண்டபம், இதன் கிழக்கே உள்ள சாவக்கட்டு மலை உச்சியிலும், மேற்கே உள்ள சங்கிலி கரடு உச்சியிலும் சுடுமண் செங்கற்களால் கட்டப்பட்டு இடிந்து தரைமட்டமாக காட்சியளிக்கும் கண்காணிப்புக் கோபுரங்கள் ஆகியவை அடங்கும்.

கடமலைக்குண்டு மக்களின் இரட்சிப்பிற்காகவும், அமைதிக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.