Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – பாலக்கோம்பை

தினம் ஒரு ஊர் – பாலக்கோம்பை
மாவட்டம் – தேனி
வட்டம் – ஆண்டிப்பட்டி
பரப்பளவு – 977.21 ஹெக்டேர்
மக்கள் தொகை – 3,500
ஆண்கள் – 1,771
பெண்கள் – 1,729
குடும்பங்கள் – 929
முதன்மைத் தொழில் – விவசாயம்

பாலக்கோம்பை கிராமத்துக்காக ஜெபிப்போம்,

பாலக்கோம்பை (Palacombai) என்பது தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில், ஆண்டிப்பட்டி வட்டாரத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது தேனியிலிருந்து 29 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் மலைகளால் சூழப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஊசிமலை, வடுவூத்து கோயில், மாட்டுத்தலை கடவு பகுதிகளில் இருந்து மழைக்காலத்தில் வரும் நீர் ஊசிமலை கண்மாயில் தேங்கும். கண்மாயில் தேங்கும் நீரால் 100 ஏக்கரில் வாய்க்கால் மூலம் நீரை கொண்டு சென்று நேரடி பாசனம் செய்யப்பட்டு வந்தது. கடந்த பல ஆண்டுகளில் குறைவான மழையால் கண்மாயில் நீர் தேங்கவில்லை. இதனால் இப்பகுதி விவசாயம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. முன்பு மூன்று போகம் விளைந்த நன்செய் நிலங்கள், தற்போது மழை நீரை மட்டுமே நம்பிய மானாவாரி நிலங்களாக மாறியுள்ளன.

பாலக்கோம்பை மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.