Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – நாராயணத்தேவன்பட்டி

தினம் ஒரு ஊர் – நாராயணத்தேவன்பட்டி
மாவட்டம் – தேனி
வட்டம் – உத்தமபாளையம்
பரப்பளவு – 331.23 ஹெக்டேர்
மக்கள் தொகை – 14,622
ஆண்கள் – 7,139
பெண்கள் – 7,483
குடும்பங்கள் – 4,311
தொழில் – விவசாயம்

நாராயணத்தேவன்பட்டி கிராமத்துக்காக ஜெபிப்போம்,

நாராயணத்தேவன்பட்டி (Narayanathevanpatti) என்பது தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் வட்டத்தில், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இப்பகுதியில் கருப்பு பன்னீர் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. இங்குள்ள பிரத்யேக தட்பவெப்ப நிலை காரணமாக ஆண்டு முழுவதும் முப்போகம் திராட்சை அறுவடை செய்யப்படுவது இந்த ஊரின் தனிச்சிறப்பாகும். முல்லைப் பெரியாறு பாசன வசதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரக் காலநிலை ஆகியவை இங்குள்ள விவசாயத்திற்கு முதன்மை அரணாக இருக்கின்றன. இப்பகுதியை சுற்றியுள்ள நன்செய் நிலங்களில் இரு போக நெல் சாகுபடி மிகத் தீவிரமாக நடைபெறுகிறது. இப்பகுதியில் செவ்வாழை, பச்சை நாடன், கோழிக்கூடு போன்ற பல்வேறு வாழை ரகங்கள் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. இங்கு தென்னை சாகுபடியும் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாராயணத்தேவன்பட்டி மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.