தினம் ஒரு ஊர் – அனுமந்தன்பட்டி

அனுமந்தன்பட்டி கிராமத்துக்காக ஜெபிப்போம்,
அனுமந்தன்பட்டி (Hanumandanpatti) தமிழ்நாடு, தேனி மாவட்டம், உத்தம்பாளையம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இது தேனி – கம்பம் நெடுஞ்சாலையில் உள்ளது. அனுமந்தன்பட்டி, மேற்குத் தொடர்ச்சி மலையின் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த கிராமம் ஆகும். முல்லைப் பெரியாறு பாசன வசதி பெறும் இப்பகுதியில் விவசாயம் மிகவும் செழிப்பாக நடைபெறுகிறது. அனுமந்தன்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திராட்சை விவசாயம் (குறிப்பாக பன்னீர் திராட்சை மற்றும் விதையில்லா கருப்பு திராட்சை) மிக அதிகளவில் செய்யப்படுகிறது. திராட்சைக்கு அடுத்தபடியாக, இப்பகுதியில் பரவலாக வாழை மற்றும் நெல் விவசாயமும் முக்கியப் பயிர்களாக
விளைவிக்கப்படுகின்றன. அனுமந்தன்பட்டியில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க, பழமையான புனித தூய ஆவியானவர் ஆலயம் அமைந்துள்ளது.
அனுமந்தன்பட்டி மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.