தினம் ஒரு நாட்டின் மாநிலம் – காப்பர்பெல்ட்

ஜெபிப்போம்.
காப்பர்பெல்ட் (Copperbelt) என்பது ஜாம்பியாவில் உள்ள ஒரு மாகாணமாகும். இது கனிவளம் நிறைந்த காப்பர்பெல்ட் பகுதியையும், தெற்கில் உள்ள விவசாய மற்றும் புதர் நிலங்களையும் உள்ளடக்கியது. இங்கு செம்புத் தாது அதிக அளவில் கிடைப்பதால் இம்மாகாணம் இப்பெயர் பெற்றது.
காப்பர்பெல்ட் பகுதியில் தாமிரம், கோபால்ட் மற்றும் யுரேனியம் ஆகிய கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. முக்கிய இடங்கள்: காஷிபா ஏரி, காப்பர்பெல்ட் அருங்காட்சியகம், சிரெங்வா ஏரி, சிலெங்வா ஏரி, பெராகா தோட்டங்கள், மின்சுண்டு பொழுதுபோக்கு பூங்கா, டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் க்ராஷ் சைட் மெமோரியல், கிராமப்புற அணை, செம்பே பறவைகள் சரணாலயம்.
காப்பர்பெல்ட் மாகாண மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.