தினம் ஒரு நாட்டின் மாநிலம் – எஞ்ஜோம்பே

ஜெபிப்போம்,
எஞ்ஜோம்பே (Njombe), தான்சானியாவின் 31 நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாகும். இது தான்சானியாவின் தெற்கு பீடபூமியில் அமைந்துள்ளது.
எஞ்ஜோம்பேயில் தேயிலை, அவரை, மக்காச்சோளம், நிலக்கடலை, உருளைக்கிழங்கு, நெல், சூரியகாந்தி ஆகியவை முக்கிய பயிர்களாகும். இங்கு கிடுலோ தேசியப் பூங்கா, கிபெங்கேரே மற்றும் லிவிங்ஸ்டன் மலைகள், இப்பகுதியின் முக்கிய அம்சங்களாகும். கிபெங்கேரே மலைத்தொடரில் ஒரு குறிப்பிடத்தக்க செங்குத்துப் பாறை, இப்பகுதியை எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்துள்ளது. நிலச் செங்குத்துப் பாறைகளின் குறிப்பிடத்தக்க அம்சம், பிரம்மாண்டமான பாறை வெளிப்பாடுகளும் உருமாற்றப் பாறைகளும் ஆகும்.
இந்த மாகாண மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.