Appam, Daily Updates

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – லிண்டி

 

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – லிண்டி
நாடு – தான்சானியா
கண்டம் – ஆப்பிரிக்கா
மொத்த பரப்பளவு – 66,040 கிமீ²
மக்கள் தொகை – 1,194,028
தலைநகரம் – லிண்டி டவுன்
அதிகாரப்பூர்வ மொழி – சுவாகிலி
தொழில் – விவசாயம்

ஜெபிப்போம்,

லிண்டி (Lindi), தான்சானியாவின் 31 நிர்வாக மாநிலங்களில் ஒன்றாகும். லிண்டி என்றால் சுவாகிலி மொழியில் ‘மறைவிடக் குழிகள்’ என்று பொருள்.
லிண்டி மாகாணத்தில் விவசாயம் முக்கிய வேலைவாய்ப்புத் துறையாகும். இங்கு முந்திரி, தேங்காய் மற்றும் மாம்பழம் போன்றவை முக்கிய பயிர்களாகும். இந்த மாநிலத்தில் செலூஸ் கேம் ரிசர்வ் – கில்வா கிசிவானி மற்றும் சோங்கோ மனாராவின் இடிபாடுகள் ஆகிய இரண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் உள்ளன. இந்த மாநிலத்தின் மேற்குப் பகுதியின் பெரும்பகுதி நியேரேரே தேசியப் பூங்கா மற்றும் செலூஸ் வனவிலங்கு காப்பகத்தில் உள்ளது. மேலும், நங்கோமா குகைகள் எனப்படும் ஆராயப்படாத குகை அமைப்பும் உள்ளது.
இந்த மாகாண மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.