Appam, Daily Updates

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – கிளிமஞ்சாரோ

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – கிளிமஞ்சாரோ
நாடு – தான்சானியா
கண்டம் – ஆப்பிரிக்கா
மொத்த பரப்பளவு – 13,250 கிமீ²
மக்கள் தொகை – 1,861,934
தலைநகரம் – மோஷி
அதிகாரப்பூர்வ மொழி – சுவாகிலி
தொழில் – விவசாயம்

ஜெபிப்போம்,

கிளிமஞ்சாரோ (Kilimanjaro), தான்சானியாவின் 31 நிர்வாக மாநிலங்களில் ஒன்றாகும்.
கிளிமஞ்சாரோவில், காபி, பார்லி, கோதுமை, சணல், சோளம், பீன்ஸ், வாழைப்பழம், பருத்தி மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை முக்கிய பயிர்களாகும். கிளிமஞ்சாரோவில், தான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை வகையைச் சேர்ந்த மலையான கிளிமஞ்சாரோ மலை ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மலைகள் யாவற்றினும் மிக உயர்ந்த மலையாகும். கிளிமஞ்சாரோ தேசியப் பூங்கா, இம்கோமாசி தேசியப் பூங்கா, பரே மலைகள், ஜிபே ஏரி, சாலா ஏரி ஆகியவை இங்கு அமைந்துள்ளன.

இந்த மாகாண மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.