தினம் ஒரு நாட்டின் மாநிலம் – கிகோமா

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – கிகோமா
நாடு – தான்சானியா
கண்டம் – ஆப்பிரிக்கா
மொத்த பரப்பளவு – 37,040 கிமீ²
மக்கள் தொகை – 2,470,967
தலைநகரம் – கிகோமா நகரம்
அதிகாரப்பூர்வ மொழி – சுவாகிலி
தொழில் – விவசாயம்
ஜெபிப்போம்,
கிகோமா (Kigoma), தான்சானியாவின் 31 நிர்வாக மாநிலங்களில் ஒன்றாகும். இது தான்சானியாவின் வடமேற்கு மூலையில், டாங்கானிகா ஏரியின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது.
கிராமப்புற மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் பெரிதும் சார்ந்துள்ளனர். பனை எண்ணெய், புகையிலை, காபி, பருத்தி மற்றும் நிலக்கடலை ஆகியவை முக்கிய பணப் பயிர்களாகும். கிழக்கே, இது கெய்தா மற்றும் டபோரா மாநிலங்களாலும், தெற்கே கட்டாவி பிராந்தியத்தாலும், மேற்கே டாங்கானிகா ஏரியாலும் சூழப்பட்டுள்ளது. மலகராசி நதி, லூச்சே மற்றும் ருச்சுகி நதி ஆகியவை முக்கிய நதிகளாகும்.
இந்த மாகாண மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.