தினம் ஒரு நாட்டின் மாநிலம் – கிழக்கு கேப்

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – கிழக்கு கேப்
நாடு – தென்னாப்பிரிக்கா
கண்டம் – ஆப்பிரிக்கா
மொத்த பரப்பளவு – 168,966 கிமீ²
மக்கள் தொகை – 7,225,784
தலைநகரம் – பிஷோ
அதிகாரப்பூர்வ மொழி – சோசா, ஆங்கிலம், ஆப்பிரிக்கான்ஸ்
தொழில் – செம்மறி ஆடு வளர்ப்பு, விவசாயம்
ஜெபிப்போம்,
கிழக்கு கேப் (Eastern Cape), தென்னாப்பிரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகும். இது தென்னாப்பிரிக்காவின் மிகவும் ஏழ்மையான மாகாணமாகும். இது தூய்மையான கடற்கரைகளைக் கொண்டுள்ளது.
கிழக்கு கேப்பில் கோதுமை, மக்காச்சோளம், சோளம், ஆரஞ்சு, அன்னாசி, புகையிலை மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை பயிரிடப்படுகின்றன. இதன் முக்கிய ஈர்ப்புகளில் கரடுமுரடான கடற்கரையைக் கொண்ட ஒரு பகுதியான ஜெஃப்ரீஸ் பே, அடோ யானைகள் தேசியப் பூங்கா, தென்னாப்பிரிக்காவின் ஒரே பனிச்சறுக்கு மையமான டிஃபிண்டெல், அலிவால் நார்த், வைல்ட் கோஸ்ட், அமடோலா மலைகளில் அமைந்துள்ள விட்டில்சீ ஆகியவை அடங்கும்.
கிழக்கு கேப் மாகாண மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.