தினம் ஒரு நாட்டின் மாநிலம் – வடக்கு மாகாணம்

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – வடக்கு மாகாணம்
நாடு – ஜாம்பியா
கண்டம் – ஆப்பிரிக்கா
மொத்த பரப்பளவு – 77,650 கிமீ²
மக்கள் தொகை – 1,623,853
தலைநகரம் – கசாமா
அதிகாரப்பூர்வ மொழி – ஆங்கிலம், இசிபெம்பா
தொழில் – விவசாயம்
ஜெபிப்போம்,
வடக்கு மாகாணம் (Northern Province), ஜாம்பியாவின் பத்து மாகாணங்களில் ஒன்றாகும். இது ஜாம்பியாவின் நிலப்பரப்பில் ஏறக்குறைய ஆறில் ஒரு பங்கை உள்ளடக்கியுள்ளது.
விவசாயமே அதன் முதன்மையான பொருளாதார நடவடிக்கையாக உள்ளது. மக்காச்சோளம், சிறுதானியங்கள், சோளம், நிலக்கடலை, அவரை வகைகள் மற்றும் நெல் ஆகியவை இங்கு அதிகம் பயிரிடப்படும் பயிர்களாகும். முக்கிய ஈர்ப்புகளில் லுவாங்வா ஆறு, மாஃபிங்கா மலைகள், இசங்கனோ தேசிய பூங்கா, சும்பு தேசிய பூங்கா, டாங்கனிகா ஏரி, பாங்வேலு ஏரி, மெரு-வா-இண்டிபா ஏரி, பிளவுப் பள்ளத்தாக்குகள், லுவாங்வா பள்ளத்தாக்கு ஆகியவைகள் அடங்கும்.
வடக்கு மாகாண மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.