தினம் ஒரு நாட்டின் மாநிலம் – லுவாபுலா

ஜெபிப்போம்,
லுவாபுலா (Luapula), வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜாம்பியாவின் பத்து மாகாணங்களில் ஒன்றாகும். இது லுவாபுலா ஆற்றின் பெயரால் அழைக்கப்படுகிறது. இது ஜாம்பியாவின் ஏழ்மையான மாகாணங்களில் ஒன்று.
விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் ஆகியவை முக்கிய பொருளாதார நடவடிக்கைகளாகும், இதில் மரவள்ளிக்கிழங்கு முக்கியப் பயிராகும். இங்கு மாங்கனீசு, சுண்ணாம்பு, தாமிரம் போன்ற கனிமப் படிவுகள் உள்ளன. லுமாங்வே நீர்வீழ்ச்சி, மும்புலுமா நீர்வீழ்ச்சி, மும்போட்டுடா நீர்வீழ்ச்சி, குண்டாப்விகா நீர்வீழ்ச்சி, சிலோங்கோ நீர்வீழ்ச்சி, சம்ஃபியா கடற்கரை, லுசெங்கா சமவெளி தேசிய பூங்கா மற்றும் பங்வேலு ஈரநிலங்கள் ஆகியவை முக்கிய ஈர்ப்புகளாகும்.
லுவாபுலா மாகாண மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.