தினம் ஒரு நாட்டின் மாநிலம் – பாயி செயின்ட் ஆன்

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – பாயி செயின்ட் ஆன்
நாடு – செஷல்ஸ் (Seychelles)
கண்டம் – ஆப்பிரிக்கா
மொத்த பரப்பளவு – 25.1 கிமீ2
மக்கள் தொகை – 4,786
அதிகாரப்பூர்வ மொழி – ஆங்கிலம், பிரெஞ்சு, செஷல்ஸ் கிரியோல் தொழில் – சுற்றுலா, விவசாயம்
ஜெபிப்போம்,
பாயி செயின்ட் ஆன் (Baie Saint Anne) என்பது செஷல்ஸின் ஒரு நிர்வாக மாவட்டமாகும். இது தீவுக்கூட்டத்தின் இரண்டாவது பெரிய தீவான பிரஸ்லின் தீவின் தென்கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. மேலும், இது அருகிலுள்ள குரியூஸ் தீவு மற்றும் சிறிய தீவுக்கூட்டங்களையும் நிர்வகிக்கிறது.
பாயி செயின்ட் ஆன்-ல் தேங்காய், மாம்பழம், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, கீரை வகைகள் போன்றவை பயிரிடப்படுகின்றன. பாயி செயின்ட் ஆன் அன்சே டகமகா, அன்சே பொன்னெட் கரே, அன்சே மாட்ஜ், அன்சே லமோர், அன்சே படாமியர் மற்றும் அன்சே லஃபரின் ஆகிய ஆறு முக்கிய கடற்கரைகளுடன் ஒரு வளைவான கடற்கரையைக் கொண்டுள்ளது.
பாயி செயின்ட் ஆன் மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.