தினம் ஒரு நாட்டின் மாநிலம் – சான்சான்

சான்சானுக்காக ஜெபிப்போம்,
சான்சான் (Zanzan) என்பது ஐவரி கோஸ்ட் (கோட் டி ஐவரி) நாட்டின் பதினான்கு நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாகும். இது நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ளது.
சான்சான் பகுதியின் பொருளாதாரம் முதன்மையாக விவசாயம் மற்றும் வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. முந்திரி, ரப்பர், கோகோ மற்றும் பருத்தி ஆகியவை மிக முக்கியமான வணிகப் பயிர்களாகும். மேலும் மரவள்ளிக்கிழங்கு, சோளம், கம்பு/கேழ்வரகு, அரிசி மற்றும் தக்காளி போன்றவை பயிரிடப்படுகின்றன. முக்கிய ஈர்ப்புகளில் யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட உலகப் பாரம்பரியக் களமான கொமோவே தேசிய பூங்கா, ஆயிரம் மசூதிகளின் நகரம் என்று அழைக்கப்படும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வணிக நகரமான போண்டூகோ நகரம் ஆகியவை அடங்கும். இங்கு அப்ரான்ஸ், குலாங்கோஸ் மற்றும் லோபிஸ் போன்ற பல்வேறு ஆப்பிரிக்க பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர்.
சான்சான் மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், அமைதிக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.