தினம் ஒரு நாட்டின் மாநிலம் – சவானெஸ்

சவானெஸ்க்காக ஜெபிப்போம்,
சவானெஸ் (Savanes) என்பது ஐவரி கோஸ்ட் (கோட் டி ஐவரி) நாட்டின் 14 நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாகும். இது வடக்கு பகுதியில் அமைந்துள்ளது.
சவானெஸ்-ன் பொருளாதாரம் முக்கியமாக விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் வர்த்தகத்தை சார்ந்துள்ளது. ஏற்றுமதிக்காக விளைவிக்கப்படும் பருத்தி இப்பகுதியின் மிக முக்கியமான வருவாய் ஆதாரமாகும். இதனுடன் கரும்பு, சீமைக்கத்தாழை மற்றும் கபோக் ஆகியவையும் பயிரிடப்படுகின்றன. அண்மைய காலங்களில் முந்திரி மற்றும் மாம்பழம் உற்பத்தியும் இங்கு முக்கியத்துவம் பெற்று வருகின்றன. ஆடு, மாடு, செம்மறியாடுகள் மற்றும் கோழி வளர்ப்பு போன்ற தொழில்கள் கிராமப்புற பொருளாதாரத்திற்கு பலம் சேர்க்கின்றன. முக்கிய ஈர்ப்புகளில் செனுஃபோ அருங்காட்சியகம், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான கொமோவே தேசிய பூங்கா, சுடானோ-சாஹிலியன் மண் மசூதிகள், லோகோலி சூழல் பண்ணை ஆகியவை அடங்கும்.
சவானெஸ் மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், அமைதிக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.