தினம் ஒரு ஊர் – மேல் குந்தா

தினம் ஒரு ஊர் – மேல் குந்தா
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – குந்தா
பரப்பளவு – 3321.27 ஹெக்டேர்
மக்கள் தொகை – 4470
ஆண்கள் – 2274
பெண்கள் – 2196
குடும்பங்கள் – 649
தொழில் – விவசாயம், சுற்றுலா
மேல் குந்தா (Melkundah) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில், மின்சார உற்பத்திக்கு நீராதாரமாக உள்ள குந்தா நீர்மின்னாக்கத் திட்டம், குந்தா ஆறு, குந்தா அணை, கெடாய் அணை ஆகியவற்றிற்கு புகழ்பெற்ற குந்தா வட்டத்தில் உள்ள ஒரு அழகிய கிராமம் ஆகும். இது கீழ் குந்தாவிலிருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலைக்கிராமத்தில் ‘தாய்ஷோலா தேயிலைத் தோட்டம்’ அமைந்துள்ளது. நீலகிரி மலைகளில் இயற்கை முறையில் தேயிலை உற்பத்தி செய்யும் எஸ்டேட்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு முக்கியத் தொழில் தேயிலை விவசாயம் ஆகும்.
மேல் குந்தா மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.