தினம் ஒரு ஊர் – மார்க்கையன்கோட்டை

மார்க்கையன்கோட்டை கிராமத்துக்காக ஜெபிப்போம்,
மார்க்கையன்கோட்டை (Markayankottai) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் அமைந்துள்ளது. இது தேனி – கம்பம் செல்லும் சாலையில் 22 கி.மீ. தொலைவில் உள்ளது. இப்பேரூராட்சியில் இருந்து 25 கி.மீ தொலைவில் சுருளி அருவி அமைந்துள்ளது. மார்க்கையன்கோட்டை பேரூராட்சி முல்லை பெரியாற்றின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியின் வழியாக பாய்ந்து செல்லும் முல்லை பெரியாறில் வருடம் முழுவதும் வற்றாத நீர் வரத்து இருக்கும். இதனால் இப்பகுதி பசுமையான பகுதியாக இருப்பதால் இப்பேரூராட்சி மக்கள் விவசாயத்தை சார்ந்து வாழ்ந்து வருகிறார்கள். மேலும் இப்பகுதியில் விளைவிக்கப்படும் இருபோக நெல், தென்னை, வாழை, காய்கறிகள் மற்றும் பயறு வகைகள் போன்றவைகள் வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மார்க்கையன்கோட்டை மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.