Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – பூதிப்புரம்

தினம் ஒரு ஊர் – பூதிப்புரம்
மாவட்டம் – தேனி
வட்டம் – போடிநாயக்கனூர்
பரப்பளவு – 11.65 ச.கிமீ
மக்கள் தொகை – 11,022
ஆண்கள் – 5,605
பெண்கள் – 5,417
குடும்பங்கள் – 3,145
முதன்மைத் தொழில் – விவசாயம்

பூதிப்புரம் கிராமத்துக்காக ஜெபிப்போம்,

பூதிப்புரம் (Boothipuram) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் வட்டத்தில் உள்ளது. இது தேனியிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சியாகும். இது மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைத்துள்ள கிராமமாகும். இந்த ஊர் தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள் அமைப்பில் முதலாம் நிலைப் பேரூராட்சி எனும் நிலையில் உள்ளது. இந்த ஊர் பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி மற்றும் ஆதிபட்டி போன்ற ஊர்களை உள்ளடக்கியது. வாழையாத்துப்பட்டி, பூதிப்புரம் பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. நீர் ஆதாரங்களில் கொட்டகுடி ஆறு, வாழை ஆறு, கல் ஆறு, ராஜபூபால சமுத்திர கண்மாய் ஆகும். இங்கு பிரதானமான தொழில் விவசாயமாகும். பூதிப்புரம் கிராமத்தின் அடிவாரப் பகுதியில் மரக்காமலை கரடு மற்றும் வனப்பகுதி அமைந்துள்ளது.

பூதிப்புரம் மக்களின் இரட்சிப்பிற்காகவும், அமைதிக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.