தினம் ஒரு ஊர் – புள்ளிமான்கோம்பை

புள்ளிமான்கோம்பை கிராமத்துக்காக ஜெபிப்போம்,
புள்ளிமான்கோம்பை (Pullimankombai) என்பது தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இந்த கிராமம் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. கி.மு. 3 மற்றும் 4-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான மூன்று தமிழி (தமிழ் பிராமி) எழுத்து பொறிக்கப்பட்ட நடுகற்கள் புள்ளிமான்கோம்பை பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. பிராகிருத மொழி கலப்பு இல்லாமல், தூய தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட இந்தியாவின் பழமையான நடுகற்களில் இதுவும் ஒன்றாகும். வைகை ஆற்றுப் படுகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீர்நிலைகள் இப்பகுதிக்கு அரணாக விளங்குகின்றன. நெல், மக்காச்சோளம், கம்பு மற்றும் சோளம் ஆகியவை பரவலாக சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும் ஆமணக்கு, அவரை, காராமணி மற்றும் வேர்க்கடலை போன்ற பயிர்களும் ஊடுபயிராகவோ அல்லது முதன்மைப் பயிராகவோ விளைவிக்கப்படுகின்றன.
புள்ளிமான்கோம்பை மக்களின் இரட்சிப்பிற்காகவும், அமைதிக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.