தினம் ஒரு ஊர் – ராஜதானி

ராஜதானி கிராமத்துக்காக ஜெபிப்போம்,
ராஜதானி (Rajadhani) என்பது தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். தேனி மாவட்டத் தலைமையகத்திலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது. ராஜதானி பகுதியில் நெல், மக்காச்சோளம், கம்பு, சோளம் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களான வாழை, தென்னை, திராட்சை போன்றவை முக்கியமாகச் சாகுபடி செய்யப்படுகின்றன. இப்பகுதிகளில் புன்செய்தி மற்றும் பாசனப் பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. இப்பகுதி விவசாயிகள் நிலத்தடி நீர் மற்றும் பருவமழையை நம்பியும், இப்பகுதியில் உள்ள பாசன வசதிகளைப் பயன்படுத்தியும் விவசாயம் செய்கின்றனர். தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்குத் தேவையான புதிய ரக விதைகள், உரங்கள் மற்றும் மானியத் திட்டங்கள் ராஜதானி உள்ளிட்ட ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்படுகின்றன.
ராஜதானி மக்களின் இரட்சிப்பிற்காகவும், அமைதிக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.