தினம் ஒரு ஊர் – சேரங்கோடு

தினம் ஒரு ஊர் – சேரங்கோடு
மாவட்டம் – நீலகிரி
வட்டம் – பந்தலூர்
பரப்பளவு – 7494 ஹெக்டேர்
மக்கள் தொகை – 33,506
ஆண்கள் – 16,475
பெண்கள் – 17,031
குடும்பங்கள் – 8,552
தொழில் – விவசாயம்
சேரங்கோடு (Cherangode) தமிழ்நாடு, நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது தமிழகத்தின் மேற்கு எல்லையான கேரளாவிற்கு அருகில் அமைந்துள்ளது. இது உதகமண்டலத்திலிருந்து வடமேற்கே 42 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சேரங்கோடு-பந்தலூர் பகுதியில் உள்ள இயற்கைச் சூழல் நிறைந்த இடங்களில் ஒன்றாகக் காணப்படுகிறது ‘கிளென் ராக்’ (Glenn Rock) பகுதி. சேரங்கோடு பகுதியைச் சுற்றி விவசாய நிலங்களுடன் கணிசமான வனப்பகுதியும் உள்ளது. இதனால் தேயிலை, காபித் தோட்டங்கள் மற்றும் இயற்கைக் காடுகள் இணைந்த பசுமையான நிலப்பரப்பு உருவாகியுள்ளது.
சேரங்கோடு மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.