தினம் ஒரு ஊர் – கெங்குவார்பட்டி

கெங்குவார்பட்டி கிராமத்துக்காக ஜெபிப்போம்
கெங்குவார்பட்டி (Genguvarpatti) என்பது தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இது கொடைக்கானல் செல்வதற்கான நுழைவு வாயிலாக உள்ளது. இது வத்தலகுண்டு – கொடைக்கானல் நெடுஞ்சாலையில் உள்ளது. இதற்கு வடக்கில் கொடைக்கானல் மலை உள்ளது. இது பழனி மலைக்குன்றுகளின் அருகே அமைந்துள்ளது. பசுமைத் தோற்றத்தைக் கொண்டிருக்கும் இவ்வூரின் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்கின்றனர். இங்கு நெல், கரும்பு, வாழை வயல்கள் மற்றும் தென்னந்தோப்புக்கள் அதிக அளவில் உள்ளன. விவசாயப் பணிகளுக்கு மஞ்சளாறு அணையிலிருந்து கால்வாய் மற்றும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறிய தடுப்பணைகளிலிருந்து நீர் பெறப்படுகிறது. தேங்காய், நெல், கரும்பு, வாழை, பருத்தி மற்றும் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
கெங்குவார்பட்டி மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.