Appam, Daily Updates

தினம் ஒரு ஊர் – காமயகவுண்டன்பட்டி

தினம் ஒரு ஊர் – காமயகவுண்டன்பட்டி
மாவட்டம் – தேனி
வட்டம் – உத்தமபாளையம்
பரப்பளவு – 13 ச.கிமீ.
மக்கள் தொகை – 16,134
ஆண்கள் – 7838
பெண்கள் – 8296
குடும்பங்கள் – 4725
தொழில் – திராட்சை பயிரிடுதல்

காமயகவுண்டன்பட்டி கிராமத்துக்காக ஜெபிப்போம்,

காமயகவுண்டன்பட்டி (Kamayagoundanpatti) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மேற்குதொடர்ச்சி மலையானது இப்பேருராட்சியின் கிழக்குப்பக்கம் அமைந்துள்ளது. ஊரின் மேற்கே முல்லை பெரியாறு ஓடிக் கொண்டு இருக்கிறது. இதன் தண்ணீர்தான் இந்த பகுதி மக்களுக்கு தண்ணீர் மற்றும் வாழ்வாதாரத்திற்கு உரியது. இப்பேருராட்சியின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். இங்கு திராட்சை பயிரிடுதல், திராட்சை பழரசம் தயாரித்தல் முக்கிய தொழிலாகும். மேலும், பன்னீர் திராட்சை என்கிற கருப்பு திராட்சை பழ விவசாயமும், நெல் விவசாயமும், தென்னை விவசாயமும் முக்கியமானது. ஊரின் கிழக்குப் பகுதியில் கல்குவாரிகளும், இந்த கல்குவாரிகளை சுற்றி கல் உடைக்கும் கிரஸ்சர்களும் உள்ளன.

காமயகவுண்டன்பட்டி மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.