தினம் ஒரு ஊர் – உல்லாத்தி – மாவட்டம் – நீலகிரி

தினம் ஒரு ஊர் – உல்லாத்தி – மாவட்டம் – நீலகிரி
வட்டம் – உதகமண்டலம்
பரப்பளவு – 2729.18 ஹெக்டேர்
மக்கள் தொகை – 9,187
ஆண்கள் – 4,543
பெண்கள் – 4,644
குடும்பங்கள் – 2,593
தொழில் – விவசாயம், சுற்றுலா
உல்லாத்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை தாலுக்காவில் அமைந்துள்ளது. ஊட்டியிலிருந்து மசினகுடி வரை சிகூர் மலைப்பாதையில் செங்குத்தாக இறங்கும் தலைகுண்டா – தெப்பக்காடு சாலையின் இருபுறமும் உல்லாத்தி மற்றும் அதன் சிற்றூர்கள் அமைந்துள்ளன. உல்லாத்தி கிராம பஞ்சாயத்தின் கிராமங்கள் முதுமலை தேசிய பூங்காவை நோக்கியவாறு அமைந்துள்ளன. இது முதுமலை புலிகள் காப்பகத்திற்கு அருகில் இருப்பதால், மான், காட்டு எருமை மற்றும் சாம்பார் மான் போன்ற வனவிலங்குகள் இப்பகுதியில் காணப்படுகின்றன. கல்லட்டி அருவி ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். இங்கு பறவைகள் ஏராளமாக உள்ளன.
உல்லாத்தி மக்களின் இரட்சிப்பிற்காகவும், சமாதானத்துக்காகவும், எழுப்புதலுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஜெபிப்போம்.