தினம் ஒரு நாட்டின் மாநிலம் – கிழக்கு மாகாணம்

ஜெபிப்போம்,
கிழக்கு மாகாணம் (Eastern Province) ஜாம்பியாவின் பத்து மாகாணங்களில் ஒன்றாகும். இது, லுவாங்வா ஆற்றுக்கும், கிழக்கே மலாவி மற்றும் தெற்கே மொசாம்பிக் ஆகிய நாடுகளின் எல்லைகளுக்கும் இடையில் அமைந்துள்ளது.
விவசாயம் இம்மாகாணத்தின் முக்கியத் தொழிலாக உள்ளது. சூரியகாந்தி முக்கியப் பயிராக விளங்குகிறது. கிழக்கு மாகாணத்தில் உள்ள லுவாங்வா பள்ளத்தாக்கு, ஜாம்பியாவில் மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்படும் வனவிலங்குப் பகுதிகளில் ஒன்றாகும். தெற்கு லுவாங்வா தேசியப் பூங்கா, வடக்கு லுவாங்வா தேசியப் பூங்கா, லுவாம்பே தேசியப் பூங்கா மற்றும் லுகுசுசி தேசியப் பூங்கா ஆகியவை கிழக்கு மாகாணத்தின் முக்கிய தேசியப் பூங்காக்கள் ஆகும்.
கிழக்கு மாகாண மக்களின் தொழில் முன்னேற்றத்திற்காகவும், சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.